Tuesday, June 19, 2012

நூல் ... அச்சில்





  லக்கான் ​:  குறியியல்  உளப்பகுப்பாய்வு





 உளப்பகுப்பாய்வு மும்மூர்த்திகளுள் ஒருவர் லக்கான். 'பிரஞ்சு ஃப்ராய்ட்'  என்று அழைக்கப் படுகின்ற இவர் மரபு வழி உளப்பகுப்பாய்வை  பின்நவீன அறிவியலாக மாற்றினார். அதனால் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார்.  ஃப்ராய்ட் வழி தாக்கம் கொண்டாலும் லக்கானின் அணுகுமுறை தனித்துவமானது. இன்றளவும் தன்னியலாக இயங்கி வருவது. இந்த லக்கானிய உளப்பகுப்பாய்வை தமிழுக்கு அறிமுகப் படுத்தும் நோக்கில் உருவாகி வருகிறது இந்நூல். அடையாளம் பதிப்பகம் வழி  இன்னும் சில மாதங்களில் இதை எதிர்ப்பார்க்கலாம்..பக். 600